VoiceTamil

THEERA IRUL short film
THEERA IRUL short film – Coming Soon

Cast: Milano, MuthuJeysingham, Kones, Keethan, Ramana,Sujeepan

Make-up: Desmila, Shiny

Lighting: Brahms

Music: Jana

Cinematography & Editing: Desuban

Production: Avatharam

Screenplay & Direction: Sathapranavan

15வது நாளில் ஐ.நா சபை நோக்கிய சிவந்தனின் மனிதநேய நடை பயணம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் இன்று 15வது நாளில் தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.

நேற்று மொத்தம் 43 கிலோமீற்றர்கள் நடந்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் தனது நடை பயணத்தை ஆரம்பித்து சில கிலோமீற்றர்கள் நடந்து சென்றுள்ளார்.

Saint-flavy என்ற இடத்தில் இருந்து Troyes நோக்கி தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சிவந்தனுடன் 12 பேர் வரையில் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.

நேற்று இத்தாலியில் இருந்து இணைந்துகொண்ட 7 பேர் இன்று இரண்டாவது நாளாகவும் சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் தம்மை இணைத்துள்ளனர். பிரான்சில் இருந்து இன்றும் தொடர்ச்சியாக மக்கள் இணைந்து வருகின்றனர்.

Troyes பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சிவந்தனை வரவேற்கக் காத்திருப்பதுடன், இந்த மக்களுடனான சிறிய சந்திப்பைத் தொடர்ந்து அவரது நடை பயணம் தொடர இருக்கின்றது.

Troyes பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சிலரும் சிவந்தனது மனிதநேய நடை பயணத்தில் தம்மை இணைத்துக்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசில் இருந்து 129 கிலோமீற்றர் தூரம் சென்றுள்ள சிவந்தன், ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை சென்றடைய இன்னும் 479 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) எழுச்சிக் கவனயீர்ப்பு நடவடிக்கையும், மனு கையளிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

க.வே.பாலகுமாரன் உயிரோடு இருக்கிறாரா?
இன்று Sri Lanka Guardian பத்திரிகை திரு.க.வே.பாலகுமாரன் அவர்கள் 17 மே 2009 அன்று இராணுவத்திடம் வெள்ளைக் கொடியுடனும் மேலும் சில உயர்நிலைத் தலைவர்களுடனும் சரணடைந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.

இராணுவத்தினரின் பகுதிக்குள் தனது மகனுடன் சரணடைந்த நிலையில் எடுக்கப்பட்ட பிரத்தியேகப் புகைப்படத்தினை வெளியிட்டள்ளது. இராணுவத்திற்குள் இருக்கும் தங்களது தகவல் பிரிவிடமிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படம் இதுவெனத் தெரிவித்துள்ளனர்.

இப்புகைப்படத்தின் பின்புலத்தில் இராணுவத்தினரின் நடமாட்டம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டதாக அமைச்சர் ஒருவரால் தெரிவிக்கப்பட்ட செய்தி இதன்மூலம் பொய்யென நிரூபிக்கப்பட்டடுள்ளது.

புனர்வாழ்வு அமைச்சகத்தின் அறிக்கையிலே திரு.க.வே.பாலகுமாரன் அவர்களினதும் திரு.யோகி அவர்களினதும் துணைவியார்கள் விதவைகளிற்கான நிவாரணம் பெறுவதாகக் கூறியிருந்ததை அடுத்து புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க அவர்களை வினவியபோது சரணடைந்த 11,686 போராளிகளிற்குள் 737 போராளிகள் தீவிர போரளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பட்டியலுக்குள் இவர்கள் பெயர்கள் வரவில்லையெனவும் அறிவித்திருந்தார்.

ஆனாலும் இந்தப்புகைப்படம் திரு.க.வே.பாலகுமாரன் அவர்களும் அவரது மகனும் இராணுவத்தின் பிடிக்குள் இருந்ததை நிரூபித்துள்ளது. இவர்கள் கொல்லப்பட்டது நிரூபிக்கப்பட்டால் சிறீலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்த்திற்கு இந்தப் புகைப்படமும் பெரிய சான்றாக அமையும்.

படம்: Sri Lanka Guardian

14வது நாளில் நடை பயணம் – காவல்துறை பாதுகாப்பு, இத்தாலியில் இருந்து இணையும் மக்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி இன்று 14வது நாளில் தனது மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் தொடர்ந்துவரும் நிலையில், அவருடன் இத்தாலியில் இருந்தும் மக்கள் இணைகின்றனர்.

இத்தாலியில் இருந்து பிரான்ஸ் நோக்கி தற்பொழுது சென்றுகொண்டிருக்கும் மக்கள் இன்னும் சில மணிநேரங்களில் தம்மையும் இந்த மனிதநேய நடை பயணத்தில் இணைத்துக்கொள்ள இருக்கின்றனர்.

அதேவேளை, பிரான்ஸ் மக்கள் 12 பேர் வரையில் தற்பொழுது சிவந்தனுடன் இணைந்து நடந்து செல்வதுடன், இன்று காலையில் இருந்து இவர்கள் இதுவரை 14 கிலோமீற்றர் நடந்து சென்றுள்ளனர்.

நேற்றும் பலர் இணைந்து நடந்திருந்ததுடன், நடை பயணம் நிறைவுபெறும் வேளையிலும் சுமார் 50 பேர் வரையில் இந்த மனிதநேயப் பயணத்தில் தம்மை இணைத்திருந்தனர்.

Provins பிரதேசம் ஊடாக நடந்துகொண்டிருக்கும் சிவந்தன் Nogent-sur-seine என்ற இடத்தை நோக்கி நடந்து செல்வதுடன், பிரான்சில் இருந்தும் இளையோர் உட்பட மேலும் பலர் இணைந்து வருகின்றனர்.

நடந்து செல்லும் சிவந்தனுக்கும், ஏனைய மக்களிற்கும் அந்தப் பிரதேச காவல்துறையினர் தற்பொழுது முன்னுக்கும், பின்னுக்குமாக இரண்டு ஊர்திகளில் பாதுகாப்பு வழங்கிச் செல்லுகின்றனர்.

பரிஸ் இருந்து 88 கிலோமீற்றர் நடந்துள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 522 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.

* சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

* தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

* மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளுடனான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒன்றுகூடல்
இன்று 06-08-2010 லண்டனில் பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளுடனான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.

வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள பிறண்ட் ரவுண் ஹோலில் இடம்பெறவுள்ள இந்த பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளுடன் சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கல்வி, விளையாட்டுத்துறை மற்றும், கலைபண்பாட்டுக் குழுவினதும், நிதிக்குழுவினதும் பிரதிநிதிகளில் ஒருவரான திருமதி. லலிதசொரூபினி பிரதீபராஜ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் புலம்பெயர் மக்களின் கல்வித்துறையை மேம்படுத்துவது, மற்றும் புலத்தில் உள்ள எம் உறவுகளில் கல்விக்காக ஏங்கும் மாணவ சமூகத்திற்கு எவ்வாறு உதவிகள் செய்து அவர்களின் கல்வித்துறையை மேம்படுத்துவது போன்ற விடையங்கள் பேசப்படவுல்ளதாகவும், அது தொடர்பாக அனுபவமுள்ளவர்களான பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், தமிழ்பாடசாலை பிரதிநிதிகள் மற்றும் கல்விமாங்கள், மாணவர்கள் என அனைவரிடமும் ஆலோசனைகளயும், கருத்துக்களையும் கேட்டறிந்து அனைவரும் புரிந்துணர்வோடு ஒன்றிணைந்து செயற்பட இந்த ஒன்றுகூடல் வழிசமைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்ள பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், தமிழ்பாடசாலை பிரதிநிதிகள், கல்விமாங்கள், மற்றும் மாணவர்களை வந்து கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒன்றுகூடல் இடம்பெறும் இடம்:

CHAMBER HOUSE,

Brent Town Hall,

Forty Lane, Wembley, HA9 9BR

காலம்: 06-08-2010 Friday

நேரம்: 7:00pm – 9:30pm

விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதி நடவடிக்கைகள் பலமிக்கதாகவே உள்ளன: அமெரிக்க
சர்வதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் – 2009 ஆண்டின் பயங்கரவாதம் தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில்,இராணுவ ரீதியாக இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒருவடம் கடந்துவிட்டது எனினும் அதன் நிதி நடவடிக்கைகள் பலமிக்கதாகவே முன்னெடுக்கப்படுவதாக ராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மக்களின் உதவிகளின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிக்கட்டமைப்புகள், பாதிப்பின்றி பாதுகாக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கை அரசாங்கத்தினால், புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நிதி நெறியாள்கையில் சிக்கல் ஏற்பட்டது.

எனினும் வட அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில், தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் நிதி திரட்டும் பொருட்டு, விடுதலைப்புலிகள் தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருவதாக அமெரிக்க ராஜாங்க திணைக்கள அறிக்கையி;ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.பி குழுவினரால் அச்சுறுத்தலுக்குள்ளாகும் புலம்பெயர் தமிழர்கள்!
விடுதலைப் போர்க்களத்தில் சிங்களப்படைகளுடன் இணைந்து செயலாற்றிய ஒட்டுக் குழுக்களால் ஈழத் தமிழர்கள் அடைந்த இன்னல்களும், இழப்புக்களும் அளவிட முடியாதவை. ஒட்டுக் குழுக்களைக் கோடரிக் காம்புகளாகப் பயன்படுத்தியே சிங்கள தேசம் தமிழீழ விருட்சமாகப் படர்ந்திருந்த விடுதலைப் போர்க் களத்தைத் தறித்து வீழ்த்தியது.

இன்றும் அந்த ஒட்டுக் குழுக்கள் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட முடியாத விஷ விரூட்சமாக, ஈழத் தமிழர்களை அச்சுறுத்தி வருகின்றது. முள்ளிவாய்க்கால் போர்க் களம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் உருவான குழப்பகரமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்துப் புதிய ஒட்டுக் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கள தேசத்தின் பாதுகாப்புத் துறைச் செயலாளரான கோத்தபாயவின் வழிகாட்டலுடன், தற்போது அவரின் விருந்தாளியாக உள்ள கே.பி. மூலமாக உருவாக்கப்பட்ட இந்த ஒட்டுக் குழுவினால் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் அச்சுறுத்தல்களுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த மாதத்தில், புலம்பெயர் நாடுகளிலுள்ள கே.பி.யின் ஆதரவாளர்கள் சிலர் கொழும்பிற்கு அழைக்கப்பட்டு, கோத்தபாய ராஜபக்ஷவினால் அமோக வரவேற்புக் கொடுக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆலோசனையின் பிரகாரம், புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியையும், ஒற்றுமையையும் சிதைத்து, தமிழீழ மக்கள் போல் அவர்களையும் அச்ச நிலைக்குள் வைத்திருக்கும் திட்டம் தீட்டப்பட்டது.

அதற்கான ஒரு குழுவும் கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. வடக்கு – கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக் கழகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்தக் குழு, வவுனியாவிலுள்ள ஒரு முகவரியுடன் தொண்டு நிறுவனமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புலம் பெயர் தமிழர்களிடம் நிதி திரட்டி, சிங்கள அரசிடம் கையளிக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள தேசத்தால் அழிக்கப்பட்டு, நொருக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குப் புனர்வாழ்வு கொடுப்பதற்கான அமைப்பாகப் புலம்பெயர் தேசங்களில் அறிவிக்கப்பட்டு, விளம்பரப்படுத்தப்படும் இந்த அமைப்பு உண்மையில், சிங்கள தேசத்தை சர்வதேச அழுத்தங்களிலிருந்தும், போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.

அண்மையில், சிறிலங்காவிற்குப் பயணம் செய்து திரும்பிய சில புலம்பெயர் தமிழர்கள் கொழும்பு விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் இந்த அமைப்புடன் இணைந்து செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பதிலும் பார்க்க அன்பாக அச்சுறுத்தப்பட்டனர் என்பதே சரியானதாக இருக்கும்.

தற்போது நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள இந்தக் குழுவினர் மூலம் புலம்பெயர் தமிழர்கள் புது விதமான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள். கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பிற்கான இணையத் தளமும் இலங்கையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த இணையத் தளத்தில் ஏற்றப்படும் அத்தனை விபரங்களும் சிறிலங்காவின் புலனாய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த அமைப்பிற்காகப் பணம் வழங்கியவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் அல்லலுறும் தமது உறவுகளுக்காக நேரடியான அல்லது வேறு அமைப்புக்களினாடாகப் பங்களிப்புக்களை வழங்கியிருந்தாலும், அவர்கள் சிங்கள அரசுக்கு எதிரானவர்களாகக் கணிக்கப்படவும், அவர்கள் மீது சிங்கள அரசு அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் புதிய வழி ஒன்று உருவாகியுள்ளது.

தனி நபர்கள் மட்டுமல்ல, வர்த்தக நிறுவனங்கள் கூட இந்த இணையத் தளத்தில் விளம்பரங்களைப் பிரசுரிக்கத் தவறினால், அவர்களை விடுதலைப்புலி ஆதரவாளர்களாகக் கருதவும், அவர்களது வர்த்தக முயற்சிகளுக்கு ஊறு விளைவிக்கவும் முடியும். மிகவும் நெருக்கடியான யுத்த காலத்திலும், மனிதப் பேரவல காலத்திலும் விடுதலைப்புலிகளின் வேண்டுகோள்களை செவிமடுக்க மறுத்தவர்கள் கூட, இந்த சிங்கள தேசத்தின் இந்தப் புதிய வரி அறவிடுதலுக்கு உட்பட மறுக்கும் பட்சத்தில், அவர்களது எதிர்கால சிறிலங்கா பயணங்களும், அவர்களது தாயக பூமியிலுள்ள சொத்துக்களும் அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் அபாயநிலை இன்று உருவாகி வருகின்றது.

சிங்கள தேசம் கே.பி. குழுவினர் ஊடாக புலம்பெயர் தமிழ் மக்கள் மீது ஒரு வடிகட்டல் அச்சுறுத்தலை மேற்கொண்டு வருகின்றது. இதனை, ஒட்டு மொத்த புலம்பெயர் தமிழர்களும் இணைந்து முறியடிப்பதன் மூலமாகவே காட்டிக் கொடுத்தல்களிலிருந்து புலம்பெயர் தமிழர்கள் தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.

புலம்பெயர் தேசத்தின் புதிய ஒட்டுக் குழுக்களால் உருவாகியுள்ள இந்தப் புதிய சவால்களை முறியடிக்க நாம் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். தமிழீழ மண் பறிக்கப்பட்டு வருகின்றது. தமிழீழ மக்கள் அவலத்திற்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டு மொத்த தமிழினமும் அவமானப்படுத்தப்படுகின்றது.

கைதுகளும், படுகொலைகளும் தொடர் கதையாக உள்ளது. அத்தனை அவலங்களுக்கும் எதிராகக் குரல் கொடுக்கும் நிலையிலுள்ள புலம்பெயர் தமிழர்களும் புதிய ஒட்டுக் குழு மூலம் முடக்கப்படும் அபாயத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

அவலப்படும் எம் உறவுகளுக்கு நேரடியாக உதவும் வகைகள் தமிழ்த் தேசிய உணர்வாளாகளால் நாடுகள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதில் இணைந்து, அவர்களை மீட்டெடுக்கும் பணியினைப் புலம்பெயர் தமிழர்கள் வேகமாகச் செய்ய முற்பட வேண்டும்.

அகத்தியன்

புலம் பெயர் தமிழர்களின் பரிதாப நிலை – தாயக உறவுகள் கவலை தெரிவிப்பு
யுத்தம் நிறைவடைந்த பின்னரும், அவசர நிலைமைகளில் வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்கள், மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு வரமுடியாத சூழ்நிலை காணப்படுவதாக எமது செய்தியாளரிடம் தாயகத்தில் உள்ள பல உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக, ஸ்ரீலங்காவில் தமது திருமணத்தை நடத்தக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் முறையிட்டுள்ளனர். இதன் காரணமாக, ஸ்ரீலங்காவின் கலாசாரத்தை ஒத்த இந்தியாவிலேயே திருமண நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, கடந்த காலங்களில் ஸ்ரீலங்காவில் இருந்து அகதிகளாக ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு சென்று, அங்கு வதிவிட உரிமை பெற்றுக் கொண்டவர்களின், உறவினர்கள் ஸ்ரீலங்காவில் இருக்கின்றனர்.

புலம்பெயர் உறவுகள் ஸ்ரீலங்காவிலேயே திருமணத்தை செய்துக் கொள்வதற்கு விரும்புகின்றனர். எனினும் அரசியல் தஞ்சம் பெற்றவர்கள் நாடு திரும்பும் பட்சத்தில் பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அண்டைய நாடான இந்தியாவுக்கு சென்று, அங்கு தமது திருமண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் வசதி அற்ற உறவினர்களின் நிலை கேள்விக்குறியாக காணப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.

சிவந்தனின் ஜெனீவா நோக்கிய மனிதநேய நடை பயணம் 13வது நாளில் தொடருகிறது
தமிழ் மக்களிற்கு நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் இன்று 13வது நாளாக தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.

சிவந்தன் நடந்து செல்லும் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கடும் மழை காரணமாக இன்று காலை தாமதமாகவே அவரது நடை பயணம் ஆரம்பித்திருந்தது.

இன்று காலை முதல் நண்பகல்வரை 10 கிலோமீற்றர்கள் அவர் நடந்துள்ளார். சிவந்தனுடன் இன்று 11 பேர் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.

எதிர்வரும் 20அம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அனுமதி பெறப்பட்டதும் அது பற்றி அறிவிக்கப்படும் என சுவிஸ், மற்றும் ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தமிழீழம் கனவல்ல… அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்!
தீப்பற்றி எரிந்த காடுகள் போல் தமிழீழ மண் தீய்ந்துபோய் உள்ளது. மண் மட்டுமல்ல, அந்த மக்களது இதயங்களும் கருகித்தான் போயுள்ளது. நாளும் பொழுதுமாக வன்னி மக்கள் இப்போதும் வதைபட்டுக்கொண்டுதான் உள்ளார்கள்.

மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மீண்டும், மீண்டும் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டுள்ளார்கள். வாழ்வைத் தொலைத்தவர்களும், வாழும் வகையைத் தொலைத்தவர்களும், ஊனமுற்றவர்களுமாக அந்த மண் சோபை இழந்து சோகமாகக் காட்சி தருகின்றது.

அவர்களது உடலில் உயிரைத் தவிர அவர்களுக்கென்று எதுவுமே மிச்சமாக இல்லை. அவர்களது அவலங்களை அப்படியே வெளிக் கொணர்ந்து உலகின் மனச்சாட்சியைத் தட்டும் பணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்போது ஆரம்பித்துள்ளது.

அழுவதற்கோ, ஆறுதல்படுத்துவதற்கோ, ஆதரவுக் கரம் நீட்டுவதற்கோ கூட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்தவர்கள், அவர்களது கல்லறைகளில் கூட கண்விழிக்க அனுமதியின்றித் தவிக்கின்றார்கள்.

இத்தனை அவலங்கள் நிறைந்த இன்றைய தாயக பூமி இங்கிருந்து செல்லும் சில ஈனத் தமிழர்களுக்கு சொர்க்க பூமியாகக் காட்சி தருவதுதான் மிகப் பெரும் கொடுமையாக உள்ளது. விபச்சாரிகள் தப்பு, சரி என்று எதையுமே கணக்கிடுவதில்லை என்பது போலவே, இவர்களுக்கும் அந்த மண்ணின் அவலங்களும், அந்த மக்கள் மீது நடாத்தப்படும் அசிங்கங்களும், அவமானங்களும் துடைத்தெறியக்கூடிய புனிதங்களாகத் தோன்றுகின்றன.

இவர்களுக்காகவென்றே சிங்கள தேசமும், அதன் கூலிக் குழுக்களும் செய்து கொடுக்கும் வசதிகளும், வாய்ப்புக்களும் இவர்களுக்கு தமிழீழம் தற்போது தேன் பாயும் பூமியாகக் காட்சி தருகின்றது. மனிதன் இழக்கக் கூடாதது மானம், இழக்க முடியாதது சுய கௌரவம். இந்த இரண்டையும் இழந்துவிட்ட இரண்டும் கெட்டான்களுக்கு சிங்களம் வரம் தரும் கர்ப்பக்கிருகமாகக் காட்சி தருவதில் வியப்புக் கொள்ள ஒன்றும் இல்லை.

தமிழீழம் சூறையாடப்படுகின்றது. தமிழ் மக்கள் அச்சத்தினுள் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். சிங்களக் குடியேற்றங்களால் தமிழீழம் திணறுகின்றது. கிழக்கைப் போல், வவுனியா போல் வன்னியும், யாழ்ப்பாணமும் சிங்கள மயப்படுத்தப்படுவதால், அங்கும் தமிழர்கள் சிறுபான்மை இனமாக அவலப்படும் நிலை படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகின்றது.

அச்சப்படுத்தப்படும், வாழ்வுரிமை மறுக்கப்படும் தமிழர்கள் கடல் கடந்து தப்பிச் செல்வதைக் கறியாகக் கொண்டிருப்பதால், சிங்களத்தின் ‘சிங்கள தீப’ கனவு நனவாகும் நிலையை அடைந்து வருகின்றது.

இந்த வருடங்களில் உல்லாசப் பயணமாக அந்தத் தமிழ் மண்ணைத் தரிசித்தவர்கள், இன்னமும் சில வருடங்களில் யாழ்ப்பாணத்தில் ‘ஆயி போவன்’ சொல்லியே தரை இறங்க வேண்டிய அவலத்தைச் சந்திக்கப் போகின்றோம் என்பதை இப்போதே உணர்ந்து கொள்ள வேண்டும்.

சின்னச் சின்ன ஆசைகளோடு சிறிலங்கா சென்று திரும்பும் எமது உறவுகள், எம் இனத்தின் எதிர்காலத்தையும் சேர்த்தே காவு கொடுக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்துவிட்டது என்று முழுக்குப் போடும் நம்மவர்கள், இன்றும் விடுதலை வேட்கையுடன் தமிழீழ மண்ணும், மக்களும், புலம்பெயர் தமிழர்களும் யாக வேள்வி நடாத்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தனி ஒரு மனிதனாகத் தனக்கான சுமையுடன் சிவந்தன் என்ற தமிழீழ விடுதலைத் தீப்பொறி லண்டனிலிருந்து ஜெனிவா நோக்கித் தனது போர்ப் பயணத்தைத் தொடர்ந்த வருகின்றது. பத்து நாட்களாக நடந்து பாரிஸ் நகரின் ஊடாகப் பயணப்பட்டுள்ள இந்த அக்கினிக் குஞ்சு புலம்பெயர் தேசத்தின் தமிழ் மக்களது திறக்காத மனக் கதவுகளை உடைத்துத் தமிழீழக் கனவை விதைக்கப் போகின்றது. அது சிங்கள தேசத்தின் பிடியிலிருந்து தமிழீழத்தை முற்றாக மீட்டெடுக்கும் புதிய போர்க் களத்தைப் புயலாக மாற்றப் போகின்றது.

இந்த யதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழம் தோற்றுப்போகவில்லை. அது தோற்றுப்போக அந்த மண்ணுக்காய்ப் போராடி மாவீரராகிப்போன எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டாhகள்.

தமிழீழம் கனவல்ல…

எங்கள் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள தேசியக் கடமைகளை நாங்கள் சிவந்தனைப் போல் தூய மனத்துடன் சுமந்து சென்றால்,

தமிழீழம் கனவல்ல!

ஈழநாடு